கிளிநொச்சியில் தாயும் மகனும் சடலங்களாக மீட்பு! (காணொளி இணைப்பு)
கிளிநொச்சி – ஜெயந்தி நகரில் தாயும் மகனும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி - ஜெயந்தி நகரிலுள்ள வீடொன்றிலிருந்து தாய் மற்றும் மகன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இருவரின் சடலங்களும் இன்று...
காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்க சர்வதேசம் உதவ வேண்டும்!(காணொளி இணைப்பு)
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்கும் வரை போராடுவோம் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்கு சர்வதேசம் ஒரு தீர்க்கமான...
கிளிநொச்சியில் தொடருந்து விபத்து:இருவர் பலி!
கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடனேயே விபத்து இடம்பெற்றள்ளது.
இளைஞர்கள் இருவரும் விபத்து இடம்பெற்ற...
கினிகத்தேனையில் காணாமல்போனவர் சடலமாக மீட்பு! (காணொளி இணைப்பு)
மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கினிகத்தேனையில் காணாமல்போன நபர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழையை அடுத்து கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை நகரில் ஹட்டன் கண்டி வீதியில் உள்ள...
மேல்கொத்மலை நீர்தேகத்தின் வான் கதவுகள் திறப்பு! (காணொளி இணைப்பு)
மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெய்து வரும் அடை மழையினால், மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததையடுத்து, இன்று காலை முதல் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள்...
தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதார அபிவிருத்தி ஏற்படும் : பிரதமர்
விஞ்ஞான தொழில்நுட்ப அறிவை வளர்த்து, எதிர்கால சந்ததியினரை புதிய உலகத்திற்குள் அழைத்துச் செல்லவேண்டும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகம் இன்று விஞ்ஞானத்தினால் வளர்ச்சி அடைந்துள்ளது, அமெரிக்கா,...
கதிர்காம கந்தனின் தீர்த்தோற்சவம் நிறைவு (காணொளி இணைப்பு)
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தனுடைய ஆடி மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நேற்று மாணிக்க கங்கையில் இடம்பெற்றது.
தீர்த்தோற்சவத்தில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.
கதிர்காமம் கந்தனுடைய ஆடி மகோற்சவம் கடந்த 03ம் திகதி பஸ்நாயக்க நிலமை...
வவுனியாவில் ஆடிப்பிறப்பு நிகழ்வு! (காணொணி இணைப்பு)
வவுனியாவில் தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச் சிலையடியில் இன்று காலை ஆடிப்பிறப்பு நிகழ்வு இடம்பெற்றது.
நகரசபை கலாசார பேரவையின் ஏற்பாட்டில் தர்மலிங்கம் வீதி, முச்சந்திலுள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் நினைவுத்தூபியில் நகரசபை உபபிதா சு.குமாரசுவாமி தலைமையில்...
அபூர்வ சந்திர கிரகணம் இன்று அதிகாலை தென்பட்டது! (காணொளி இணைப்பு))
149 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அபூர்வமான சந்திர கிரகணம் இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது.
இன்று அதிகாலை இடம்பெற்ற அபூர்வ சந்திர கிரகணத்தை இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள மக்கள் வெற்றுக் கண்களால் காணக்கூடியதாக...
கன்னியா வெந்நீருற்றில் போராட்டத்தில் ஈடுபட்டோர்மீது சுடுதண்ணீர் ஊற்றி அவமதிப்பு: கன்னியாவில் பதற்றம்!(Ubdate)
கன்னியா வெந்நீருற்று பௌத்த மயமாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் காணப்பட்ட இடத்தில், பௌத்த விகாரை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டமொன்று...