உடுப்பிட்டி மு.சிவசிதம்பரத்தின் 17 ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதி சபாநாயகரும், அகில இலங்கை தமிழக்காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினருமான உடுப்பிட்டி மு.சிவசிதம்பரத்தின் 17 ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இன்று காலை, வடமராட்சி நெல்லியடி நகர்ப்பகுதியில் அமைந்துள்ள மு.சிவசிதம்பரத்தின் திருவுருவச் சிலைக்கு முன்பாக 17 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வின்போது சுடர் ஏற்றப்பட்டு, திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
1956ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்த மு.சிவசிதம்பரம், 1960ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் உடுப்பிட்டி தொகுதியில் அகில இலங்கை தமிழக் காங்கிரஸின் சார்பில் போட்டியிட்டு, பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
அத்தோடு, 1965 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டிய மு.சிவசிதம்பரம், இலங்கை பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகராகவும் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.