Update-புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக இன்று இடம்பெற இருந்த 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் தேர்தல்களின் போது இரண்டு கட்சிகளும் செயற்படக் கூடிய விதம் தொடர்பில் ஆராயும் நோக்கிலே இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவிருந்தது.

இந்நிலையில், கூட்டணி அமைப்பது சம்பந்தமான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஜூன் 26 ஆம் திகதி இடம்பெறும் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, குறித்த பேச்சுவார்த்தைகள் 5 முறை இடம்பெற்ற போதும் எந்தவித இறுதி முடிவுகளும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.(சே)

Previous articleசோமாலியாவில் தொடர் குண்டுவெடிப்பு பலர் மரணம்
Next articleமீண்டு இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்!