நான்கு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரிடம், வாக்குமூலத்தை பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தயாராகி வருகிறது.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் தொடர்பாக சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமையவே அவரிடம் இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
இதேவேளை இன்று முற்பகல் அத்துரலியே ரத்ன தேரர் கண்டி வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(மா)