தியாகி பொன் சிவகுமாரின் 45 ஆவது சிரார்த்த தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
தியாகி பொன் சிவகுமாரின் 45 ஆவது சிரார்த்த தினம் இன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது அகவணக்கம் இடம்பெற்று, பொன் சிவகுமாரின் சகோதரியால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து தியாகி பொன் சிவகுமாரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.கே சிவாஜிலிங்கம், விந்தன் கனகரட்னம், கஜதீபன், எஸ்.தவராசா, அனந்தி சசிதரன் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், மறவன்புலவு க.சச்சிதானந்தம் என பலரும் கலந்துகொண்டு பொன்.சிவகுமாரனை நினைவுகூர்ந்தனர்.