யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி உரிமப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்துகொண்டு சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி உரிமைப் பத்திரங்கள் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ் சுகிர்தன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
வடக்கு பிரதேச செயலகம் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் 3990 பேர் சமுர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(மா)