
பள்ளிக்குடா பூநகரி பகுதியினை சேர்ந்த சுகேந்திராசா துகீசன் என்ற 8 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த மாதம் 5ம் திகதி குறித்த ஆண் குழந்தைக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் குழந்தையை பூநகரி வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் குழந்தை நேற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
இறப்பு விசாரணையினை வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோணையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.(மா)