துபாயில் இடம்பெற்ற சாலை விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
ஓமானில் இருந்து துபாய் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் வெளிநாட்டவர்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.
துபாய் அருகே பேருந்து வந்த போது, பேருந்து வீதியில் உள்ள வழிகாட்டல் பெயர் பலகையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் பயணித்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமைடைந்த 5 பேர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகள் துபாய் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் உடல்களில் ஐவரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (ம)