பங்களாதேஸ் அணியின் முதலாவது உலகக் கிண்ணப் போட்டியில் அணியின் தலைவர் மஷ்ரஃபே மொர்ட்டாசா விளையாடுவார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய அணியுடன் நேற்று இடம்பெற்ற பயிற்சி போட்டியில் அவர் காயமடைந்தார்.
இதனை அடுத்து அவர் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை தென்னாப்பிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரின் பங்களாதேஸ் அணிக்கான முதலாவது போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
எனினும் அவர் அன்றைய போட்டியில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு அவரால் முழுமையாக குணமடைய முடியுமா என்பதில் ஐயம் வெளியிடப்பட்டுள்ளது.






