
வயோதிப தம்பதிகளான இருவரும் தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில். மூதாட்டிக்கு நீண்ட நாட்களாக கால் விறைப்பு இருந்து வந்துள்ளது. இதனை போக்குவதற்கு வீட்டினுள் பழைய துணிகளை எரித்து அதன்மேல் காலை வைத்து விறைப்பை போக்குவதனை வழமையாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென கால் விறைப்பு ஏற்பட்டபோது வழமை போல் துணிகளை எரித்து காலை அதன் மேல் வைத்துள்ளார். இதன்போது தீச்சுவாலை இவரின் உடையில் பற்றியதனால் எரிகாயங்களுக்கு உள்ளானார். காயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்துள்ளார். திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மரண விசாரணையை மேற்கொண்டதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (நி)