பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின், தேசிய தோட்ட முகாமைத்துவ நிலையத்தின் வருடாந்த விருது விழா – 2019, இன்று நடைபெற்றது.

இலங்கையில், தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகம், 1979 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கபட்டது.

இதன் ஊடாக, பெருந்தோட்ட துறைசார் பயிற்சி நெறிகள்¸ உயர் கல்வி நெறிகளை கற்பிக்கப்படுகின்றன. இங்கு இவ்வாறான பாடநெறிகளை பூர்த்தி செய்வோருக்கு சான்றிதழ் வழங்கவும், தகைமை உள்ள பெருந்தோட்ட நிறைவேற்று அதிகாரிகளுக்கு தொழில் அங்கத்துவம் வழங்கவும், அதிகாரம் வழங்கப்பட்ட ஒரே ஒரு அரசாங்க நிறுவனமாக, இந்த பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனம் காணப்படுகின்றது.

இந்த நிறுவனத்தின் ஏற்பாட்டில், பயிற்சி நெறிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, கொழும்பு பண்டாரநாக்க ஞாபகார்த்த சர்தேச மாநாட்டு கலாசார மண்டபத்தில், இன்று நடைபெற்றது.

நிகழ்வில், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் ஆகியோர் கலந்துகொண்டு, சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.(சி)

 

Previous articleமாவை சேனாதிராஜா – மு.க.ஸ்டாலின் சந்திப்பு
Next articleலங்கா சமசமாய கட்சியின் ஆலோசனை அறிக்கை எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிப்பு.