நாட்டின் பாதுகாப்பு, நூறு வீதம் உறுதி செய்யப்பட்டுள்ளமையினால், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அச்சமின்றி வருகை தர முடியும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள சுற்றுலாத்துறை அமைச்சில், இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இனி அச்சமின்றி இலங்கைக்கு வருகை தர முடியும். நாடளாவிய ரீதியில் தற்போது பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 200 சந்தேக நபர்கள், தொடர்ந்தும் தடுப்பில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் தவிர, ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் அரைவாசிப்பேர் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இருந்த போதிலும் கைதுகளும், விசாரணைகளும் தொடர்ச்சியாக இடம்பெறும். என குறிப்பிட்டுள்ளார். (சி)