மட்டக்களப்பு பல்கலைக்கழகம் சட்டரீதியாக நிர்மாணிக்கப்பட்டதாகவும், பல்கலைக்கழகத்தை ஒருபோதும் அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்வதற்கு இடமளிக்க முடியாது எனவும், பல்கலைக்கழக நிறுவுனரான முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன், ஆளுநர்; பதவியை மீளப்பொறுப்பேற்பது குறித்து, இதுவரை எந்தவொரு யோசனையும் தனக்கு கிடையாது என்றும், ஆனால் ஜனாதிபதி அழைத்தால் அதனைப் பொறுப்பேற்கத் தயார் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் தன்மீது கடும் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்ற அத்துரலியே ரத்தன தேரர் உட்பட சில ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு, தாம் தயாரில்லை எனவும், முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறிப்பிட்டார். (சி)

Previous articleஏ.ரி.எம் அட்டையை திருடி, பணம் திருடியவர் கைது
Next articleகுருணாகலில் பாரிய ஆர்ப்பாட்டம்