ஏ.ரி.எம் அட்டையை களவாடி, நுவரெலியா ஹட்டன் பகுதியில், அரச வங்கி ஒன்றில் பணத்தை திருடிய சந்தேக நபர் ஒருவரை, ஹட்டன் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
ஹட்டன் புருட்கில் தோட்ட பகுதியை சேர்ந்த, 66 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், ஹட்டன் மற்றும் அவிசாவளை பகுதிகளில், அரச வங்கியில் ஏ.ரி.எம் அட்டையை பயன்படுத்தி ஒரு இலட்சத்து 22 ஆயிரம் ரூபா பணத்தை திருடியதாக, ஏ.ரி.எம் உரிமையாளர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்த முறைபாட்டுக்கு அமைய, சந்தேக நபர் ஹட்டன் நகர பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபர், நாளை ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், ஹட்டன் பொலிஸார், மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)