ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் எதிர்வரும் ஆகஸ்ட் மாத 11ஆம் திகதிக்கு பின் தங்களுடன் இணைவார் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்
கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்
நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டி , தீவிரவாதத்தை இல்லாமல் செய்து பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கும் அணி ஒன்று தயாராக இருக்கின்றது . மிக விரைவில் ஐக்கிய தேசிய கட்சியின் மிக பிரபல்யமான ஒருவர் தன்னனுடைய ஆதரவாளர்களுடன் எங்களுடன் இணைவார் அப்போது புரியும் இவர்களுக்கு நாங்கள் யார் என்று. அதேபோல எதிர்வரும் 11ஆம் திகதி எங்களுடன் இணையும்படி நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் … இந்த அரசுக்கு எதிரானவர்கள் யாராக இருந்தாலும் எங்களுடன் இணையலாம் என்றும் தெரிவித்தார்
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்
ரணில் விக்ரமசிங்க இத்தனை நாட்களாக இரண்டு சிலிண்டர்கள் கொண்ட வாகனம் ஒன்றைத்தான் செலுத்திக்கொண்டிருந்தார்.. இப்போது அவருக்கு எட்டு சிலிண்டர்களை கொண்ட வாகனம் ஒன்று தேவைப்பட்டுள்ளது அதாவது வீ 8 ரக வாகனம் ஒன்று.. நாம் அவர் இரண்டு சிலிண்டரை கொண்ட வானத்தில் நாட்டை எப்படி கொண்டு சென்றார் என்பதை இத்துணை நாட்களாக பார்த்துக்கொண்டிருந்தோம் ..
இனி வீ 8டை பயன்படுத்தி இன்னும் நாட்டை அளித்து விடுவார் என்பது மாத்திரம் உண்மையான விடையம்.. அவர் எதை சொன்னாலும் செய்தாலும் வாகனத்தையும் , ஓட்டுனரையும் மாற்றவேண்டும் என்று அவரது கட்சியிலேயே பலர் குரல் எழுப்பிக்கொண்டிருக்கின்றார்கள் ..
உளருகின்ற தலைவர் ஒருவர் எங்களுக்கு தேவையில்லை என்று சொல்வதை நாம் நேற்றும் பார்த்ததோம் அதேபோல மட்டத்தில் தோல்வியடைந்த தலைவரும் தேவையில்லை என்றும் சிலர் சொல்கின்றனர் . எங்களுக்கு தெரியாது யார்உளருபவர் , யாரை தோல்வி அடைந்தவர் என்று எது எப்படி இருப்பினும் வெற்றி உங்களுக்குதான் என்றும் இதன் போது லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.(சே)








