சைட்டம் பட்டதாரிகளை மூன்று வாரங்களுக்குள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சைட்டம் மருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்த 82 பேருக்கு, மூன்று வாரங்களுக்குள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சைட்டம் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற 3 பட்டதாரிகளால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனு மீதான இறுதிப் பரிசீலனை புலனெக அலுவிகார, பிரீதி பத்மன் சூரசேன மற்றும் எல்.டி.பீ தெஹிதெனிய ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவின் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று முதல் 3 வாரங்களுக்குள் சைட்டம் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்களைப் பதிவுசெய்யுமாறு உயர்நீதிமன்றம், இலங்கை மருத்துவக் கல்லூரிக்கு உத்தரவிட்டுள்ளது.

அத்தோடு குறித்த வழக்கு கட்டணமாக மனுதாரர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் வீதம் வழங்குமாறும் நீதிபதிகள் குழு உத்தரவிட்டுள்ளது. (நி)

Previous articleதமிழ் கைதிகள் விடயத்தில் அரசு பாகுபாடு:காணாமல் ஆக்கப்பட்டடோர் சங்கம்
Next articleகல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!