இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் திலான் சமரவீர நியூசிலாந்து அணியின் பயிற்றுவிற்பாளராக கடமையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடம்பெற உள்ளது.

இப்போட்டிகள் உலக கிண்ண டெஸ்ட் போட்டிகளின் ஆரம்ப போட்டிகளாக கருத்திற் கொள்ளப்பட உள்ளது.

இப்போட்டிக்கான நியூஸிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராகவே திலான் சமரவீர நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 14 ஆம் திகதி காலியில் இந்த டெஸ்ட் போட்டிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.(சே)

Previous articleடிக்கோயா நகர சபையில் வாக்குவாதம்! (காணொளி இணைப்பு)
Next articleதமிழ் கைதிகள் விடயத்தில் அரசு பாகுபாடு:காணாமல் ஆக்கப்பட்டடோர் சங்கம்