நுவரெலியா ஹட்டன் டிக்யோ நகரசபையில் அழகமுத்து நந்தகுமார் தலைவராக இருந்த காலப்பகுதியிலேயே மோசடி இடம்பெற்றுள்ளதாக டிக்கோயா நகர பிதா சடையன் பாலச் சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
நுவரெலியா ஹட்டன் டிக்கோயா நகரசகையில் அழகமுத்து நந்தகுமார் தலைவராக இருந்த காலப் பகுதியிலேயே, சாரதிகளையும் ஏனைய உத்தியோகத்தர்களையும் தனக்கு தேவைப்பட்டவர்களில் இருந்து மாத்திரம் தெரிவு செய்து நியமித்தார் என, டிக்கோயா நகரபிரா எஸ்.பாலச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
டிக்கோயா நகரசபையின் கடந்த அமர்வின்போது, டிக்கோயா நகர சபையின் முன்னாள் தலைவரும்,தற்போதைய உறுப்பினருமான அ.நந்தகுமாரினால் சபையின் வாகனங்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, நகர பிதா மேற்படி குற்றச்சாட்டினையும் முன்வைத்துள்ளார். (நி)