ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவுக்கு ஜனாதிபதியால் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சராக இருந்த புத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் திறன் விருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமட்டு, மண்டபத்தடி விவசாயிகளுக்கு, நெல் உடைக்கும் இயந்திரங்கள் வழங்கிவைப்பு
Next articleஅமைச்சரின் 60 இலட்சம் ரூபாய் பணத்தை காணவில்லை