வவுனியா றம்பைவெட்டியில், சிறுநீரக நோய் தடுப்பு செயல்திட்டத்தின் கீழ், நீர் சுத்திகரிப்பு நிலையம், இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின், சிறுநீரக நோய் தடுப்பு செயல்திட்டத்தின் கீழ், சுமார் 15 இலட்சம் ரூபா நிதியிலும், வவுனியா பூனாவ கடற்படையின் பங்களிப்பிலும், நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், அதனை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், திறந்து வைத்தார்.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் மாதர் அபிவிருத்தி சங்க சமாசத் தலைவர் சுதாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வவுனியா நகர சபை உப தவிசாளர் சு.குமாரசாமி, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளர் மகேந்திரன் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, வவுனியா மாவட்டத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின், சிறுநீரக நோய் தடுப்பு செயல்திட்டத்தின் கீழ், 3 இடங்களில் 45 இலட்சம் ரூபா செலவில், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (சி)








