யாழ். பல்கலைகழகத்தில் பொலித்தீன் பாவனைகளை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலை கல்வி சமூகம் தெரிவித்துள்ளது.

உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை பேண முடியும். அதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளையும் ஊக்குவிக்க முடிவதோடு பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்த முடியும்.

இந்த செயற்பாட்டை மாணவர்கள் மத்தியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கு மாணவர்கள் பூரண ஆதரவை தருவதற்கு முன் வந்துள்ளனர்.

அந்த வகையில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் சிற்றுண்டி சாலையில் பொலித்தீன் பாவனையை இல்லாமல் செய்து அதற்கு மாற்றீடாக வாழையிலை , தாமரையிலை ஆகியவற்றை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.(சே)

Previous articleதிருக்கோவில் குட்னிக் விளையாட்டுக் கழகத்தின் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள்
Next articleசவுதி அரேபியாவின் இளவரசர் காலமானார்