அம்பாறை மாவட்ட விசேட தேவையுடையோருக்கான வலையமைப்பின் ஏற்பாட்டில் விசேட தேவையுடைய மாணவர்களின் விளையாட்டு கலாசார நிகழ்வு மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரியில் விசேட தேவையுடைய வலையமைப்பின் தலைவரும் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளருமான கலாநிதி எஸ்.எம்.உமர்மௌலான தலைமையில் நடைபெற்றது.
இங்கு பௌத்த, இந்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தலைவர்களான சங்கைக்குரிய சுகந்தரத்னகிமிதேரர், சிவஸ்ரீ மு.சபாரெத்தினம் குருக்கள், அருட்தந்தை ஏ.கிருபைராஜா, மௌலவி ஜீ.கமால்டீன் ஆகியோரின் ஆசியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
அம்பாறை மாவட்டத்தில் விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்கும் 16 பாடசாலைகளைச் சேர்ந்த 350 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலர் இவ் விளையாட்டு கலாசார நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இங்கு பேசிய சங்கைக்குரிய சுகந்தரத்னகிமிதேரர் கூறுகையில்..
விசேட தேவையுடைய பிள்ளைகள் அனைவரும் கடவுளின் குழந்தைகள் இக்குழந்தைகளுக்கு கல்வி கற்பித்துக் கொடுக்கின்றவர்கள் சேவை செய்கின்றவர்கள் இறைவனின் நேரடி ஆசீர்வாதத்திற்குரியவர்கள். நாம் அனைவரும் இந்து, பௌத்த, இஸ்லாமிய, கிருஸ்தவர்கள் ஒன்று சேர்ந்து அமைதியான இலங்கைத் தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும். எமக்குள் இன, மத, குலபேதங்கள் இருக்கக்கூடாது. சிங்கப்பூர் நாட்டில் பல்லின சமூகங்கள் வாழ்;கின்றனர். அச்சமூகங்கள் ஒன்று சேர்ந்த எப்படி சிங்கப்பூரை அழகிய தேசமாகவும் அபிவிருத்தியடைந்த நாடாகவும் கட்டியெழுப்பியுள்ளார்கலோ அதுபோன்று எமது நாட்டையும் அபிவிருத்தியடைந்த நாடாக கட்டியெழுப்ப வேண்டும். என குறிப்பிட்டார். (சி)









