உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி சாட்சி வழங்க உள்ளதாக தெரிவுக்குழு உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தனஇ அமைச்சரவை அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் சாட்சி வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற தெரிவுக்குழு தற்போது பல்வேறு தரப்பினர்களிடம் சாட்சி விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அதன் இறுதி அறிக்கை அடுத்த மாதத்திற்கு முன்னர் சமர்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(சி)

Previous articleபல்கலைக்கழக வளாகத்தில் தீப்பரவல்
Next articleஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழா