ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான அரசியல் அமர்வு, திருகோணமலை அபயகிரி விகாரையில் நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றொசான் ரணசிங்க கலந்து கொண்டார்.

பொதுஜன பெரமுனவின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காமினி கேவா விதாரணவின் தலைமையில் நடைபெற்ற குறித்த அரசியல் அமர்வில், பொதுஜன பெரமுனவின் திருகோணமலை நகராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், சட்டதரணிகள், அரசியல் இராஜதந்திரிகள் கலந்து கொண்டனர்.

வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரைத் தேர்வு செய்வது தொடர்பாக, எதிர்வரும் 15ம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் அரசியல் அமர்விற்கு, அனைவரையும் அழைப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Previous articleவவுனியாவில், எதிர்வரும் சனிக்கிழமை கவனயீர்ப்பு
Next articleமுகத்துவார கடலில் மீனவர் மாயம்! : தொடரும் தேடுதல் பணிகள்