வடக்கு, வட மத்திய, மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களில் வறட்சியாக காலநிலை நிலவுகின்றது.
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக 6 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஒரு இலட்சத்து 73 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 15 ஆயிரத்து 984 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு, வட மத்திய, மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்கள் வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. (நி)








