அம்பாறையில் தமிழர்கள் ஒற்றுமையாக இருக்காவிட்டால் மாற்று சமூகத்துக்கு அடிமையாக இருக்கும் நிலை ஏற்படும் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
காரைதீவில் மக்களுக்கான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழர்கள் தமக்குள் ஒற்றுமையில்லாது பிரிந்து பல்வேறு மாற்று கட்சிகளுக்கு செல்லும்போது தமிழர்களுக்கான பலம் இல்லாமல்போகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால், ஏனைய பேரினவாத சக்திகள் தமிழ் சமூகத்துக்குள்ளே நுழையக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்……
காரைதீவு மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் காரைதீவு பிரதேச செயலகத்தில் இன்று வழங்கப்பட்டுள்ளன.
காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் நிதி ஒதுக்கீட்டில் மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் முகமாக 204 பேருக்கு குறைவீடுகளை திருத்துவற்காக நிதி உதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணப்பிள்ளை ஜெயசிறில், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். (சி)