மலையக ஆசிரிய உதவியாளர்களின் சேவைத்தரம் மற்றும் சம்பளத்திட்டம் தொடர்பாக மேலதிக அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு கல்வி அமைச்சு உறுதி அளித்துள்ளதாக நுவரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் கலந்தாய்வு கூட்டம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இந்த முடிவு கட்டப்பட்டதாகவும் அவர் புறபரபிட்டுள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இடம்பெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மலையக ஆசிரிய உதவியாளர்களின் பிரசரசினை குறித்து ஆராய மகாண கல்வி அமைச்சு அதிகாரிகளையும் பாராளுமன்றத்துக்கு அழைத்து இன்று கலந்துரையாடப்பட்டது.
மூவாயிரம் ஆசிரிய உதவியாளர்கள் பெருந்தோட்ட பாடசாலைகள் பலவற்றுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளார்கள். இதில் வெவ்வேறு மாகாண சபைகள் வெவ்வேறு விதமான தீர்மானங்களை எடுத்துள்ளன. சப்ரகமுவ மாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்களின் பயிற்சியில் பின்னர் உரிய சேவைத் தரத்துக்கும் சம்பளத்தட்டத்துக்கும் உள்வாங்கப்பட்டுள்ள அதே வேளை மத்திய மாகாணத்தில் அவர்களை இன்னும் தமது ஆசிரிய குழாம் பட்டியலிலிலேயே உள்வாங்காமல் உள்ளனர். எனவே இந்த குளறுபடிகளை நீக்கி பயிற்சியை முடித்துக்கொண்டதன் பின்னர்
ஒவ்வொரு ஆசிரிய உதவியாளரும் உரிய சேவை தரத்துக்கும் சம்பளத்திட்டத்துக்கும் உள்வாங்கும் வகையில் புதிய அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு கல்வி அஅமைச்சு இணக்கம் வெளியிட்டுள்ளது.
இதேநேரம் பாடசாலைகளில் நிலவும் தளபாட தட்டுப்பாடுகள், மின்சார கட்டமைப்பு பிரச்சினை, கூரைகள் உடைத்தருத்தல் போன்ற பிரச்சினைகள் குறத்தும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து விரைவில் “பைபர்” ( Finer) வகையிலான தளபாடங்களை விரைவில் பெற்றுக் கொடுக்கவும் குறைபாடுகளை வலய மட்டத்தில் கணக்கில் எடுத்து அமைச்சு நிதியல் அதனை சரிசெய்யவும் உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உறுதி அளித்துள்ளார்.
மேலும் நுவரலியா மாவட்டத்தில் நானு ஓயா பகுதியில் அமைக்கப்படவுள்ள மும்மொழி மூல தேசிய பாடசாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு ஏக்கர் காணி போதாத நிலையில் மேலும் மூன்று ஏக்கர் காணியினை பெற்றுக் கொள்ளும் வகையில் பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து அடுத்த வாரம் அளவில் இணை அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்தவுள்ளதாகவும் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் தெரிவித்துள்ளார்.(சே)