வேலைவாய்ப்பு விடயத்தில் அம்பாறை மாவட்ட வெளிவாரி பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.எல்.இஸ்ஸடீனிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நற்பிட்டிமுனை பகுதியில் அமைந்துள்ள கல்முனை பிராந்திய அலுவலகத்திற்கு இன்று சென்ற அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் முஹம்மட் ஜெஸீர் மகஜரை கையளித்துள்ளார்.
வெளிவாரி பட்டதாரிகள் விடயத்தில் அரசாங்கம் பாரிய துரோகத்தை செய்துள்ளதாகவும், இந்த அநீதிக்கு நியாயம் கோரி மனித உரிமை ஆணைக்குழுவிற்கு தற்போது மகஜர் ஒன்றை கையளித்துள்ளதாகவும் முஹம்மட் ஜெஸீர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற பட்டச்சான்றிதள் உள்ள உள்வாரி, வெளிவாரி வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகள் கடந்த அரசாங்கத்தில் வேலைவாய்ப்பைப் பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (நி)








