கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு, மன்னாரில் இன்று மாலை நடைபெற்றது.
விடுதலை போரட்டத்தின் ஆரம்பத் தலைவர்களான, தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, போராளிகளான ஜெகன், தேவன் நடேசுதாசன், குமார், சிவபாதம் சிறீக்குமார், மரியாம்பிள்ளை, குமார குலசிங்கம் உட்பட 53 அரசியல் கைதிகளின் 36 ஆவது நினைவு நாள் நிகழ்வு, தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது, தமிழ் உணர்வாளர்கள், சமூக ஆர்வலர்கள், நகர சபை, பிரதேச சபை, உறுப்பினர்கள் இணைந்து கொண்டனர்.
உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களின் உருவப் படங்களுக்கு மாலை அனுவிக்கப்பட்டு, தீபம் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன், தமிழ் மக்களுக்காய் இன்னுயிர் ஈந்த தியாகிகளின் தியாகத்தை வெளிப்படுத்தும் சுவரொட்டிகளும், பொது இடங்களில் மக்களின் நினைவுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.