எந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளர் என்பது முக்கியமல்ல. நாட்டின் எதிர்கால நலன் கருதி யார் சிறந்த கொள்கைத்திட்டங்களுடன் தேர்தலில் போட்டியிடுகின்றார்களோ அவர்களுக்கே ஆதரவளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நாட்டிற்கான சிறந்த வேலைத்திட்டங்களுடன் எமது வேட்பாளரை அறிவிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும். இந்த முறைமை தொடருமே ஆனால் இனிவரும் காலங்களில் யார் ஜனாதிபதியானாலும் பிரதமரானாலும், அவர்களுக்கிடையில் எப்போதும் முரண்பாடுகள் ஏற்படும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் மாகாண சபை தேர்தல்களை நடத்த சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தங்களை முடிவை ஜனாதிபதிக்கு அறிவித்தாவும் அது தொடர்பில் ஜனாதிபதி முடிவுகளை எடுப்பார் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்…(சே)

Previous articleகிண்ணியாவில், மரத்தளபாட விற்பனை நிலையமொன்றில் தீ (video)
Next articleபாராளுமன்றில் இரா.சம்பந்தன் ஆவேசம்!