திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கச்சக்கொடுத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள மரத்தளபாட நிலையமொன்றில், இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான மரத்தளபாடங்கள் தீக்கிரையாகியுள்ளன.

குறித்த மரத்தளபாட விற்பனை நிலையத்தில், இன்று அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் திருகோணமலை தீயணைப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து கிண்ணியா பிரதேச செயலகம், கிண்ணியா நகர சபை, பிரதேச சபையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து தீயினை இன்று காலை 9 மணியளவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

இவ்விபத்து சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

https://www.facebook.com/askmediadannews/videos/344528899802481/

Previous articleயாழ் தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கிடையே மோதல்
Next articleராஜபக்ஷ முக்கியமல்ல நாட்டின் எதிர்காலம் தான் முக்கியம்-மஹிந்த