பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரில் மோதவுள்ள இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது இலங்கை அணியுடன் மூன்று சர்வசே ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

முதல் போட்டி நாளைய தினம் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந் நிலையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனமானது பங்களாதேஷ் அணியுடன் மோதவுள்ள இலங்கை அணியை நேற்றைய தினம் அறிவித்துள்ளது.

திமுத் கருணாரத்ன தலைமையிலான 17 பேர் கொண்ட இந்தக் அணிக் குழாமில் குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டீஸ், அஞ்சலோ மெத்தியூஸ், லஹிரு திரிமான்ன, செஹான் ஜெயசூரிய, தனஞ்சய டிசில்வா, வஸிந்து அசரங்க, அகில தனஞ்சய, லசித் மலிங்க, நுவான் பிரதீப், லஹிரு குமார, திஸர பெரேரா, இசுறு உதான, கசூன் ராஜித மற்றும் தசூன் சானக்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.(சே)

Previous articleசீனாவில் மண்சரிவு பலர் மரணம்
Next articleஷாபிக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு