கிளிநொச்சி மக்கள் அமைப்பின் 1001 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் கோப்பாய் கோட்டக் கல்வி பாடசாலைகளில் கல்வி பயிலும் 50 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு, புத்தூர் நவக்கிரி அமெரிக்கன் மிசன் தமிழக் கலவன் பாடசாலையில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது, கோப்பாய் கோட்டத்திற்குட்பட்ட அச்சுவேலி மத்திய கல்லூரி, புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி, அச்சுவேலி புனித தெரேசா மகளிர் கல்லூரி மற்றும் குட்டியப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்கும் 50 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. (நி)