விளையாட்டுதுறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழுவை தங்களது பதவிகளில் இருந்து விலகுமாறு அறிவிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள இறுதி ஒருநாள் போட்டிக்கு நுவன் குலசேகரவின் பெயரை வைக்குமாறும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ நேற்று கிரிக்கெட் நிறுவனத்திடம் அறிவிப்பு விடுத்திருந்தார்.

மேலும் மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார உள்ளிட்ட பிரதான வீரர்களின் ஆலோசனைகள் உள்ளடங்கிய கிரிக்கெட் சட்ட திருத்தம் நேற்று அமைச்சரினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது .

Previous articleமன்னாரில் சட்டவிரோத கற்றாளை அகழ்வு
Next articleயாழ். கொடிகாமத்தில் கெற்பேலி சிவனாலய மண்டபம் திறந்து வைப்பு