யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியிடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளும், டிப்பர் ரக வாகனமும் மோதிக் கொண்டதில் இவ் விபத்தும் சம்பவித்துள்ளது.
விபத்தில் கரணவாய் வடக்கு நவிண்டில் பகுதியைச் சேர்ந்த முகுந்தன் திசாந் என்ற 19 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (சி)








