வவுனியா தாஸ்நகரில் முன்பள்ளி மாணவர்களின் கல்வித்திறனை அதிகரிக்கும் நோக்கோடும், அவர்களின் பாதுகாப்பான கல்வியை மேம்படுத்தும் நோக்கோடும், விபுலானந்தா முன்பள்ளி இன்று திறந்து வைக்கப்பட்டது.
வட மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட இருபது இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த முன்பள்ளியை,வட மாகாணசபை உறுப்பினர் முன்னாள் ஜி.ரி.லிங்கநாதன் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம், வவுனியா முன்பள்ளி பாடசாலைகளின் கோட்ட இணைப்பாளர் ப.சசிகலா, மகாறம்பைக்குளம் அ.த.க பாடசாலையின் அதிபர், கிராம அபிவிருத்தி சங்க உபதலைவர் மற்றும் முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (சி)








