நூவரெலியா மாவட்டத்தில் அதிகரிக்கப்பட்ட பிரதேச சபைகளுக்கு நிரந்தரமான கட்டடங்கள் வளங்களைப் பெற்றுக் கொடுக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தை வர்த்தமானி அறிவித்தல் விடுத்து நடைமுறைக்கு கொண்டுவரவும் மாகாண சபைகள் உள்நாட்டு அலுவல்கள் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ்இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
மாகாண சபைகள் உள்ளூராட்சி உள்நாட்டு விவகார அமைச்சின் நிர்வாக மாவட்டங்கள்தொடர்பான சட்டத்திருத்தம் மீதானவிவத்த்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதேமேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.






