இலங்கை ரயில்வே சேவையில் ஒன்றிணைப்பதற்காக எஸ்13 ரக இரட்டை எஞ்சின் பெட்டிகளும் எம்11 ரக எஞ்சின்களும் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
இது வரையில் எஸ்13 ரக இரட்டை எஞ்சின் பெட்டிகளும் எம்11 ரக எஞ்சின்களும் கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டது இதனை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய நிதி உதவியின் கீழ் இலங்கைக்கு இவை கொண்டுவரப்பட்டுள்ளது
இந்திய நிதி உதவியின் கீழ் மொத்தமாக ஆறு எஸ்13 ரக இரட்டை ரயில் பெட்டிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பவிந்தன அவற்றில் மூன்று ஏற்கனவே இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன. நேற்று கொண்டுவரப்பட்டதுடன் நான்காக அமைகின்ற இன்னும் இரண்டு எஸ்13 ரக இரட்டை ரயில் பெட்டிகள் எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளன.
மேலும் மலையக ரயில் சேவைகளுக்கு புதிதாக எஸ் -14 ரக எஞ்சின்களும் இறக்குமதி செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.(சே)













