நாட்டின் சில பகுதிகளிலும், நாட்டினை சூழவுள்ள கடற்பரப்புக்களில் நிலவும் கடும் காற்றுடனான வானிலை நாளைய தினத்துடன், தளர்வடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டின் சில பகுதிகளிலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் கடும் காற்றுடன் கூடிய நிலை நாளைய தினத்திலிருந்து குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்தோடு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் சில இடங்களில் 50 மில்லி மீற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டின் சில பிரதேசங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், தென், மத்திய, சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleபுலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டி நூல் வழங்கி வைப்பு!
Next articleமைத்திரியை மீண்டும் ஜனாதிபதியாக்க மஹிந்தவிற்கு ஸ்ரீ.சு.க அழைப்பு!