யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வதியும், பொருளாதார ரீதியில் நலிவுற்ற 100  பாடசாலை மாணவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் நலிவுற்றுள்ள மாணவர்கள், மானிப்பாய் சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்களின் ஊடாக தெரிவு  செய்யப்பட்ட நிலையில், குறித்த புத்தகப் பைகள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.  இந்நிகழ்வு, வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க தலைமைச் செயலகத்தில், வாலிபர் சங்க தலைவர் பகீரதன் தலைமையில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக சமுர்;;த்தி உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். (மு)

Previous articleதீவிரவாதம் தொடர்பில் கவனம் தேவை : சம்பிக்க எச்சரிக்கை
Next articleஇஸ்ரேல் பிரதமர் செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு விஜயம்.