நுவரெலியா கினிகத்தேனையில், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வினை பெற்றுத் தருவதாக அமைச்சர் பழனி திகாம்பரம் உறுதியளித்துள்ளார்.
அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட கினிகத்தேனை பகுதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் பழனி திகாம்பரம் இன்று நேரடியாக சென்று பார்வையிட்டார். இதன்போது மண்சரிவினால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உரிய தீர்வினை பெற்றுத்தருவதக அமைச்சர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது. (மு)








