உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்று மாத நிறைவை முன்னிட்டு, நேற்றையதினம் நாடளாவிய ரீதியில் பல மதஸ்தலங்களில் விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள தேவாலயத்திலும் நேற்று விசேட வழிபாடு நடைபெற்றது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றார்.

இலங்கை சபையின் பேராயர் டிலோராஜ் கனகசபை ஆண்டகை தலைமையில் இச்சிறப்பு பிரார்த்தனை இடம்பெற்றதுடன், அமைச்சர் சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட குழுவினரும், திருத்தந்தை பெரி பிரோகியர் உள்ளிட்ட ஏனைய திருத்தந்தைகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (மு)

Previous articleசோளம் உற்பத்தியை ஊக்குவிக்க அமைச்சு நடவடிக்கை.
Next articleமண்சரிவினால் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் பழனி திகாம்பரம்