வவுனியாவில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் புகையிரதம் மோதியதில் இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளார். வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோதுண்ட இளைஞர் கல்கமுவ பகுதியை சேர்ந்த மதூன் திலிந்த ஜெயவீர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வவுனியா மூன்று முறிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்தில் பேரூந்துகளை சுத்தம் செய்யும் பணியை செய்துவந்த இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்திற்கு அருகில் சில்லறை காசுகள் மற்றும் தீப்பெட்டி என்பன மீட்கப்பட்டுள்ளதுடன். சம்பவம் விபத்தா? அல்லது தற்கொலையா? என்பது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். (மு)

Previous articleமூதூர் பாட்டாலிபுர மக்கள் வீட்டத்திட்டம் வழங்க கோரிக்கை
Next articleஅறுகம்பை சுற்றுலாத்துறை பிரதேச கொட்டுக்கல் வீதி திறந்து வைக்கப்பட்டது