திருகோணமலை மூதூர் பாட்டாலிபுர கிராம மக்கள், மானிய முறையிலான வீடமைப்பு திட்டம் வழங்கி வைக்குமாறு, உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூதூர் பாட்டாலிபுரம் கிராமத்தில் யுத்தத்தின் பின்னர் தாம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு தற்போது 10 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும், தமக்கான அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்து தரப்படவில்லை என கவலை வெளியிட்டுள்ளனர்.

பாட்டாலிபுரம் மக்களை இன்று சமூக அபிவிருத்தி கட்சியினர் சந்தித்தபோதே மக்கள் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளனர். (மு)

Previous articleஹேமசிறி மற்றும் பூஜித் நீதிமன்றில் ஆஜர்
Next articleவவுனியாவில் புகையிரத்தில் மோதுண்டு இளைஞன் உயிரிழப்பு.