திட்டமிட்டப்படி நேற்று நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இலங்கைதபால் சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் ஜகத் மகிந்த இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் போராட்டம் நடத்த வேண்டாம் என்று கோரிக்கை விடுத்த போதிலும் இப்ப போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சேவை யாப்பில் உள்ள பிரச்சினைகளை முன்னிறுத்தி கடந்த 17 ஆம் திகதி தொழிற்சங்க போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அந்த போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்க பெறாததன் காரணமாக மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இலங்கை அஞ்சல் சேவையாளர் சங்க தலைவர் ஜகத் மகிந்த தெரிவித்துள்ளார்.(சே)








