காலி மாவட்டத்திலுள்ள ரத்கம – கெகில்ல மண்டியச் சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று இடம்பெற்ற இத்துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர், கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வௌதெனிய – கபுமுல்ல பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கிகளுடன் உடவளவ தேசிய வனத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட மூவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடவளவ தேசிய வனப்பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்து வௌ;வேறு வகையான 3 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். (சி)






