பிரிட்டனிலும் லைபீரியாவிலும் பதிவு செய்யப்பட்ட இரு எண்ணெய் கப்பல்களை, ஈரான் கைப்பற்றியுள்ளது.

ஈரான் சிறைப்பிடித்துள்ள பிரிட்டன் எண்ணெய் கப்பலில் 18 மாலுமிகள் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட, பிரிட்டிஸ் கொடியுடன் காணப்பட்ட ஸ்டெனா இம்பெரோ என்ற எண்ணெய் கப்பலை, 23 மாலுமிகளுடன் கைப்பற்றியுள்ள ஈரான், குறிப்பிட்ட கப்பல் கடல்சார் விதிமுறைகளை மீறியுள்ளது என குற்றம் சுமத்தியுள்ளது.

கப்பலை ஈரானிய கடற்படையினர் பன்டர் அபாஸ் துறைமுகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர் என பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த கப்பலில் காணப்பட்ட 23 மாலுமிகளில் 18 பேர் இந்திய மாலுமிகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இந்திய மீனவர்களை மீட்கும் முயற்சியில் தற்போது இந்திய மத்திய அரசு முனைப்பு காட்டி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ஈரான் பிரிட்டனின் கப்பலை சிறைப்பிடித்ததால், வளைகுடா கடற்பிராந்தியத்தில் பதற்றம் நீடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. (நி)

 

Previous article7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!
Next articleசம்பூரில் டெட்டனேட்டர்கள் மீட்பு!