மட்டக்களப்பு மத்தி காத்தான்குடி கல்விக்கோட்டத்தில் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ள மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று முதலாம் இடத்தினை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச கோட்ட கல்விக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச கல்விக்காரியாலயத்தின் பணிப்பாளர் ஏ.ஜீ.எம்.ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையினான கல்வி உயர் மட்டக்குழுவினர் இப்பாடசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டு இம்மாணவர்களை பாராட்டி கௌரவித்தனர்.
இதற்கமைவாக பெட் மீட்டன் போட்டியில் மூன்றாவது வருடமாகவும் காத்தான்குடி அல்-ஹிறா வித்தியாலயம் மாகாண மட்ட போட்டியில் வெற்றிபெற்று சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டதுடன் காத்தான்குடி மத்திய கல்லூரி 18 வயதுக்குற்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் மாகாண மட்டத்தில் சம்பியனாக தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இம்மாணவர்களை பாராட்டி கௌரவித்ததுடன் அவர்களுக்கான நிதி அன்பளிப்புகளையும் வழங்கி வைத்தார்.(MA)









