மத்திய மலைநாட்டில் பெய்துவரும் அடைமழை காரணமாக நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதால் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
கடந்த இரு தினங்களாக பெய்துவரும் மழையினால் நீரோடைகள், ஆறுகள் என நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளன.
மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர் மட்டம் காணப்படுகின்றது.
இந்நிலையில் நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
விமலசுரேந்திர நீர்த்தேக்கம் மற்றும் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் வான்கதவும் திறக்கப்பட்டுள்ளன.
காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதால் நீர்த்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். (நி)







