மட்டக்களப்பு – திருகோணமலை மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாணத்தில் காணியற்ற மக்களின் காணிப்பிரச்சினையை தீர்க்கும் வகையிலான காணி கச்சேரி, இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காணியற்றவர்களுக்கு காணிகளை காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் மூலம் வழங்கும் வகையில் இந்த காணிகச்சேரி நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு – திருகோணமலை மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆணையாளர் கே.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் பத்மஸ்ரீ லியனகே, காணி பிரிவிற்கான பணிப்பாளர் என்.வன்னியாராட்சி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி முகுந்தன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இன்றைய தினம் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு காணி கச்சேரிகள் நடாத்தப்பட்டதாகவும் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வீடமைப்பு அமைச்சர் சஜீத் பிரேமதாசவினால் வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாக, மட்டக்களப்பு – திருகோணமலை மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆணையாளர் கே.விமல்ராஜ் தெரிவித்தார். (சி)

Previous articleமட்டு, மாமாங்கேஸ்வரர் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு சிரமதானம்
Next articleமட்டு, சத்துருக்கொண்டானில் சடலமாக மீட்கப்பட்ட வயோதிபர்